கொரோனா முன்கள பணியாளர்களான கிராம சுகாதார செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு தாய் சேய் நல அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மேலும், கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாலின பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்,2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கிராம சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மகப்பேறு பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், அரசு தலைமை மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களை போலவே கிராமப்பகுதி சமுதாய சுகாதார செவிலியர்களுக்கும் கொரோனா காலத்தில் வழங்கப்பட வேண்டிய சிறப்பு ஊதியம்,பயணப்படி ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.