கிரெடிட் கார்டு வசதியுடன் பலான தொழில் நடத்திய பலே பெண் கைது: 3 அழகிகள் மீட்பு

சென்னை சைதாப்பேட்டையில் குடியிருப்புப் பகுதியில் கிரெடிட், டெபிட் கார்டு வசதியுடன் விபசார விடுதி நடத்திய பலே பெண்ணை கைது செய்த போலீசார் அங்கிருந்து 3 பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

 

சென்னை, சைதாப்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விக்ரமனின் தனிப்படை எஸ்ஐ செல்வகுமார், எஸ்ஐ மஞ்சுளா, தலைமைக்காவலர் வெங்கடேசன், முதல்நிலை காவலர் பூர்ணகுமார் அடங்கிய போலீசார் அது தொடர்பாக தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சைதாப்பேட்டையில் உள்ள சுப்ரமணிய முதலி தெருவில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனையடுத்து அங்கு தனிப்படை போலீசார் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். அங்கு பாலியல் தொழில் செய்த மயிலாப்பூரைச் சேர்ந்த கீதா (வயது 32) என்ற பெண்ணை கைது செய்தனர். விபசாரத் தொழிலுக்கு தயாராக இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

பியூட்டி பார்லர் நடத்தி வந்த கீதா அதில் வருமானம் வராததால் பாலியல் தொழிலில் இறங்கியதாகவும், ரூ. 15 ஆயிரம் வாடகைக்கு வீட்டை எடுத்து விபசாரத்துக்கு ரூ. 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசதிக்கேற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலித்துள்ளார். மேலும் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு கட்டணம் செலுத்தும் வசதிக்கு ஸ்வைப்பிங் மிஷினையும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக வராத வாடிக்கையாளர்களை தானாக போன் செய்து அழைப்பதை தொழிலாக கீதா செய்து வந்துள்ளார் போன்ற விவரங்கள் தெரியவந்தன. விசாரணைக்குப் பின்னர் கீதா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!