தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.. ரெம்டெசிவர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.
மருந்து வாங்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடைய (+ve) சான்றிதழ், மருத்துவர் பரிந்துரைக்கும் சீட்டு, நோயாளிகளின் ஆதார் கார்டு மற்றும் நோயாளிகளின் ஸ்கேன் ரிப்போர்ட், வாங்க வருபவர்களின் ஆதார் கார்டு கட்டிப்பாக வேண்டும்.
ஒரு ‘ரெம்டெசிவிர்’ குப்பியின் விலை ரூ.1,545 ஆகும். அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள் வழங்கப்படுகிறது. மேலும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோர் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.