குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக சரக்கு பாட்டில்கள் விற்பனை: பெண் உள்பட 4 பேர் கைது

குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக கிண்டி, வேளச்சேரியில் கள்ளமார்க்கெட் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 590 மதுபாட்டில்களை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தினமான நேற்று நாடு முழுவதும் மதுக் கடைகள் மூடப்பட்டு மது விற்பனை தடை செய்யப்படுவதாக தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனையடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் அந்த காவல் மாவட்ட பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீலாங்கரை கிண்டி சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் சிலர் தடையை மீறி கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

அதனையடுத்து அந்த பகுதிகளில் தீவிர வேட்டை நடத்தியதில் நீலாங்கரை உதவிக்கமிஷனர் விஷ்வேஸ்வரய்யா தலைமையில் எஸ்ஐ தமிழன்பன், தலைமைக்காவலர் பிரதீப் மற்றும் முதல்நிலைக் காவலர் இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நீலாங்கரையில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது நீலாங்கரை, வெட்டுவாங்கேனி பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நாகவல்லி (வயது 36) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கிண்டியில், வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள மதுபானக்கடையில் தடையை மீறி மது விற்பனை செய்த சரவணன் (வயது 24) என்பவரை அடையாறு துணைக்கமிஷனரின் தனிப்படை எஸ்ஐ செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சைதாப்பேட்டை, சிஐடி நகரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சஞ்சய் (வயது 22) மற்றும் ராகவன் (வயது 25) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் ரூ. 17,000 ஆயிரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர்களை கைது செய்த தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

 

Translate »
error: Content is protected !!