குற்றச் செயல்களை குறைக்க ; கிராமங்கள் தோரும் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பு

கிராமங்கள் தோரும் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பை ஏற்படுத்தி குற்றச் செயல்களை குறைக்க காவல்துறை நடவடிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளத்தின் அனைத்து கிராங்களில் உள்ள கிராம தலைவர்கள் மற்றும் தன்னார்வளர்களை கொண்டு காவல்துறையினர் கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்பை உறுவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பானது கிராமங்களில் நடக்ககூடிய முக்கிய நிகழ்வுகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணிப்பது, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பது, குழந்தை திருமணம் தடுப்பது, திருட்டு, போதை பொருட்கள் விற்பவர்களை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும்,

கிராம விழிப்புணர்வு காவலர் அமைப்பு கண்காணிப்பது, நாள்தோரும் காவலர்கள் ரோந்து பணி செய்து கிராம விழிப்புணர்வு காவலர்கள் அமைப்புடன் தொடர்பில் இருந்து கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்தி உள்ளது காவல்துறை.

இந்த அமைப்பில் உள்ள அனைவரையும் ஒன்றினைத்து தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஷ்வி அவர்கள் தலமையில் நடைபெற்ற கழந்தாயவு கூட்டத்தில் கிராமங்களில் குற்றச் செயல்களை தடுக்கவே ஏற்படுத்த இந்த அமைப்பு எனவும்,

இந்த அமைப்பில் உள்ளவர்கள் நடக்கு குற்றச்செயல்களை தெரிவிக்கும் படசத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதன் மூலம் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுணர்வு ஏற்படுத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பெரியகுளம் தாலுக்காவின் அனைத்து கிராமங்களில் இருந்து வந்த கிராம, சமுதாய தலைவர்கள் பெரியகுளம் காவல்துறை துணைகண்காணிபாளர் முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல இடங்களில் புறநகர் காவல் நிலையம் அமைக்கவும் பெரியகுளத்தில் மகளிர் காவல்நிலையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

Translate »
error: Content is protected !!