தேனி–அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்த நிலையில், இக்குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வார அப்பகுதி விவசாயிகள், குடியிருப்போர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்று துணை முதல்வரின் உத்தரவின்பேரில் ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தனது சொந்த செலவில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளை துவக்கினார்.
ஆகாய தாமரைகள் அதிகளவில் பரவி இருப்பதால் விரைந்து அகற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் ஆகாய தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் ஏற்பாட்டில் அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியினை நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவிபல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் 10 நாட்களுக்குள் ஆகாய தாமரைகளை முழுமையாக அகற்றப்படும் என தெரிகிறது. இப்பணிகள் குறித்து அப்பகுதி விவசாய சங்கத்தினர் கூறும்போது, ஆகாய தாமரைகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்கப்படும். சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் உயரும். மேலும் இக்குளத்திலிருந்து நீர் மாறுகால் பாய்ந்து மீறுசமுத்திரம் கண்மாயை அடைகிறது.
இப்பணிகளை விரைந்து முடிக்க அதி நவீன இயந்திரத்தை வரவழைத்து பணிகளை துவக்கி வைத்த தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் குடியிருப்போர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நகர அவைத்தலைவர் முருகேசன், சார்பு அணி செயலாளர்கள் இலக்கிய அணி முருகேசன், சிறுபான்மை பிரிவு அபுதாஹீர், வர்த்தக அணி கே.எஸ்.கே.நடேசன், மாணவரணி பாலமணிமார்பன், மீனவரணி வைகைகருப்புஜி, தகவல்தொழில்நுட்ப பிரிவு பாலசந்தர், நகர துணை செயலாளர் ரெங்கநாதன், நகர பொருளாளர் வீரமணி, நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராஜகுரு, செல்வராஜ், அசோக் மற்றும் மயில்வேல், ஆப்பிள்முருகன், ஜெயப்பிரகாஷ், நாகராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.