அமரகாவியம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மியா ஜார்ஜ் . இன்று நேற்று, நாளை வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , எமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கேரளாவைச் சேர்ந்த அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை மணந்தார். இந்நிலையில், இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மியா ஜார்ஜ் தனது குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் என்று பெயர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.