கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வெளியிட ரூ 250 கோடி கேட்ட ஓடிடி தளம்.. மறுத்த படக்குழு

கடந்த 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் “கேஜிஎஃப்”.இதை தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டரில் வெளியாகவில்லை.

இந்த நிலையில், கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை ரூ 250 கோடிக்கு நேரடியாக வெளியிட முன்னணி ஓடிடி தளம் கேட்டுள்ளது. இதற்காக நடிகர் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை தியேட்டரில் மட்டும் தான் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஓடிடி தளத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!