கேரளாவில் 15,600 பேருக்கு கொரோனா

கேரள மாநிலம் முழுவதும் இன்று 15,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 30,11,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  இன்று 148 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,108 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மாநிலம் முழுவதும் 11,629 பேர் கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் தற்போது 1,07,925 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 28,89,186 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என கேரளா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!