அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரது நெருக்கமான நபர் ஒருவர் வீடு உட்பட 60 இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ரூ .811 கோடி முறைகேடாக ஒப்பந்தம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 17 பேர் மீது ஊழல் தடுப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். லஞ்ச ஒழிப்புத் துறை இன்று கோயம்புத்தூரில் உள்ள கே.சி.பி நிறுவனத்தில் சோதனை நடத்த வருகின்றனர்.