கொடைக்கானலில் உள்ளூர் வாசிகள் அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆதார் அட்டை அவசியம் என போக்குவரத்து மேலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது மக்கள் அன்றாட தேவைகளுக்கும் வேலை பயணமாகவும் செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலம் என்பதால் சுற்றுலாப்பயணி வருகைக்கு தடை நீடித்து வரும் நிலையில் கொடைக்கானல் மக்கள் பயணம் மேற்கொள்ளும் போது ஆதார் அட்டை காண்பித்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென கொடைக்கானல் போக்குவரத்து மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.