கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர்.
அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.