உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் ஆகவே இருக்கிறது.
மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஏரியை சுற்றி தங்களுடைய இரு சக்கர வாகனங்களில் ரேஸ்கள் நடத்துவதும் தொடர்ந்து தான் இருக்கிறது மேலும் ஏறி சாலையில் இருசக்கர வாகனங்களில் செய்யப்படும் சாகசங்கள் மற்றும் பைக் ரேஸ்கள் தொடர்ந்து வருவதால் அந்த பகுதியில் அதிக அளவில் கூட கூடிய சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி சாலையில் இருசக்கர வாகனம் மோதி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது மேலும் ஏரி சாலையைச் சுற்றி வாகனங்கள் வருவதை காவல்துறையினர் கடுமையாக கட்டுப்படுத்தி பல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருக்கிறது.