கொடைக்கானலில் தொடர் பலத்த மழை… மக்கள் கடும் அவதி..!

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 7வது தெரு பகுதியில் தொடர் மழை காரணமாக பாலம் இடிந்ததுஇதனால் இந்த பாலம் அருகில் இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் சேதமானதுதொடர் மழை காரணமாக பாலம் இடிந்ததில் மழைநீர் இந்த பாலம்அருகில் இருந்த ஐந்து வீடுகளுக்குள் புகுந்ததுவீட்டில் இருந்த மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.  

சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக இந்த பாலம் இடிந்து உள்ளதுசம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த பாலத்தில் மதகுகள் மற்றும் சேதமான தாங்கு சுவர்களை உடனடியாக சீரமைத்தனர்இதனால் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மற்றும் சாக்கடை நீர் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்பின்னர் நகராட்சி பணியாளர்கள்தன்னார்வலர்கள் வீட்டிற்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர்மேலும் வீட்டின் அருகே  நிறுத்திவைக்கப்பட்டிருந்த  இரண்டு கார்களும் முற்றிலும் சேதமடைந்தன.

 

 

Translate »
error: Content is protected !!