கொடைக்கானலில் நோய் தாக்கம் ஏற்பட்டு வரும் அவக்கோடா பழங்கள் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. இந்நிலையில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் அதிகளவில்  பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு,அவரை போன்ற விவசாய பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் ஊடுபயிராக அவக்கேடோ, ப்ளம்ஸ், பீச்சஸ் போன்ற பழவகைகளும் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அவக்கோடா சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது பெருமாள்மலை,நாயுடுபுரம் ,பள்ளங்கி ,வில்பட்டி ,செண்பகனூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வகை பழங்கள்  காய்க்கத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில், கிலோ ரூபாய் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவக்கேடோ பழங்கள் தமிழகம்  மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது . மருத்துவ குணம் வாய்ந்த பழம் என்பதால் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

அவக்கேடோ பழங்களில் தற்போது நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. நோய் தாக்கத்தினால் பழங்களும், காய்களும் கறுப்பு நிறத்தில் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதுடன், சந்தையில் பழங்களுக்கு விலை இல்லாமலும் போகிறது.மேலும் நோய் தாக்காமல் இருக்க தோட்டக்கலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!