திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை போது முழுவதுமாகவே வீசி வந்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பண்ணை காட்டிலிருந்து தாண்டிக்குடி செல்லக்கூடிய பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் ஆலடிபட்டி அருகே பலத்த காற்றால் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்து இருக்கின்றன.
மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கோட்டாட்சியர் முருகேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.