கொடைக்கானல் அருகே அதிசய ராட்சச சிலந்தி வலை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம் இந்த கிராமத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி ராட்சச வலை ஒன்று பின்னி இருக்கிறது. இந்த வலை இரண்டு மரங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது.

வழக்கமாக சிலந்தியின் வலை மிகவும் சிறியதாகத் தான் இருக்கும் ஆனால் தற்போது இந்த மரங்கள் முழுவதும் வலை பின்னப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2011 ஆண்டின் கணக்கின்படி உலகத்தில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாக தெரிகிறது இதில் கொடைக்கானலில் 40க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தம் உடலில் சுரக்கும் சுரபியின் வைத்து மெல்லிய வலைகள் பின்னுகிறது அனைத்து வகைகளும் ஆன இந்த சிலந்திகள். மேலும் சிலந்தியின் வலைக்குள் சிக்கிய  சிலந்திகளுக்கு  றைகள்உணவாக மாறுகிறது. இதில் ஒரு சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக மனிதர்கள் இருக்கக்கூடிய இடங்களில் சிலந்திகள் வலை பின்னி நாள் அந்த சிலந்திகள் உடனடியாக மனிதர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

காடுகளில் இருக்கக்கூடிய சிலந்தி வலைகள் மட்டுமே நிரந்தரமாக அதனுடைய ஒரு தங்கும் இடமாக இருப்பது வழக்கம் தற்போது தமிழகம் முழுக்க ஊரடங்கு எடுக்கப்பட்டு வருகிறது போக்குவரத்து முழுவதுமாகவே துண்டிக்கப்பட்டு இருக்கிறது இந்த போக்குவரத்து துண்டிப்பு அதன் காரணமாக மலைச்சாலைகளில் இருக்கக்கூடிய இருபுறங்களிலும் வனப் பகுதிகள். தற்போது தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி வருகிறது இதனை காரணமாக வைத்து தான் கொடைக்கானலில் இருந்து கே சி பட்டி வழியாக ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய மலைச்சாலையில் இந்த சிலந்தி வலை மிகவும் அபூர்வமாக காணப்படுகிறது.

சராசரியாக 30 அடிக்கு மேலாக இந்த இந்த சிலந்தி வலை அமைந்திருக்கிறது ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்க்கும் இந்த சிலந்தி வலை தன்னுடைய விரித்துள்ளது. மேலும் இந்த சிலந்தி வலை மிகவும் ஆச்சரிய படுத்துவதாக மக்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சிலந்தி வலைகள் வெளிநாட்டில் மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டங்களில் இருக்கக்கூடிய இவை எளிதாக காண முடியும் எனவும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுவே முதன் முறையாக அதிசயமாகப் பார்க்கப்படும் சிலந்தி வலையாக தற்போது இருக்கக்கூடிய இந்த வலை தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!