கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி 56 இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். மருத்துவ படிப்பும் படிக்காமல் பொதுமக்களை ஏமாற்றி மக்களுக்கு முறையற்ற முறையில் பார்த்து மருத்துவம் வந்ததாகவும்,
இதில் சில பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு விதித்துள்ள கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்க்க அதிக மக்களை கூட்டமாக வைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்.
கொடைக்கானல் வட்டாசியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இதனை அடுத்து கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆலோசனையின் பேரில் சார்பு ஆய்வாளர் ரமேஷ் ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பூம்பாறை கிராமத்தில் விசாரணை நடத்தி போலி டாக்டரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து மருந்து மாத்திரைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போலி மருத்துவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.