டீ கடைகளுக்கு தமிழக அரசு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொடைக்கானலில் ஒரு சில கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு தடை நீடித்து வருவதால் டீ கடைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பெரும் பாதிப்படைந்ததுடன் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வந்தது ..பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மேலும் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் டீ கடைகள் உள்ளிட்டவைகளுக்கு பார்சல் சேவைக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாகும்..கொடைக்கானல் அதனை சுற்றி பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவர்களுக்கு தடை இருந்து வருகிறது ..தொடர்ந்து நேற்று தமிழக அரசு சார்பில் டி கடைகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கொடைக்கானலில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருக்கிறது.. அதிலும் டி கடைகள் ,உணவகங்கள் ஆகியவற்றில் பார்சல் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருந்து வருவதால் வியாபாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது. இதனால் பார்சல் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர் .இதனால் கடை திறந்து காணப்பட்டாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.