கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் குறைய வில்லை. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தையின் பட்டப்படிப்பு வரையில் கல்வி ,விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும்.
பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது! pic.twitter.com/nbLr6q4w55
— M.K.Stalin (@mkstalin) May 29, 2021