கொரோனாவுக்கு சென்னை செகரேட்டரியேட் காலனி சப் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்

சென்னை செகரேட்டரியேட் காலனி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு இன்று காலையில் உயிரிழந்தார்.

சென்னை தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாபு (வயது 57). சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 8ம் தேதி அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று பரிசோதித்ததில் இல்லை என ரிசல்ட் வந்தது. அதனையத்து 24ம் தேதியும் கொரோனா இல்லை என உறுதியானது. ஆனால் நுரையீரலில் தொற்று அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு வந்துள்ளார். அதற்காக கடந்த மாதம் 3ம் தேதி முதல் ஐசியூ வார்ட்டில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரை பில்ரோத் ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார். பில்ரோத் மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி கொரானா பரிசோதனை செய்ததில் நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடலை அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா பூதூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.
இறந்து போன பாபுவுக்கு நிர்மலா என்ற மனைவியும், சுபாஷினி என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர். சுபாஷினிக்கு திருமணம் ஆகி கணவருடன் வசிக்கிறார். மகன் ராம்குமார் சென்னை ஆயுதப்படை போலீசில் காவலராக உள்ளார்.
—-––––––––––––––––––––––––––––––––––––––––––

Translate »
error: Content is protected !!