கொரோனா ஊரடங்கால் பசியுடன் சுற்றும் குரங்குகள்..!

கொரோனா ஊரடங்கு குரங்குகளையும் விட்டு வைக்கவில்லை. லோயர்கேம்ப்குமுளி மலைப்பாதையில் பசியுடன் குரங்குகள் சுற்றித்திரியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அதிலும் தமிழககேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப்குமுளி மலைப்பாதையில் வலம் வருகிற குரங்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.இது, தமிழககேரள மக்களின் பிரதான மலைப்பாதையாக உள்ளது. இதனால் அந்த மலைப்பாதையில் எப்போதும் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும்.

குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தமிழக தொழிலாளர்கள் இந்த மலைப்பாதை வழியாகவே செல்வர்இதேபோல் தேக்கடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த மலைப்பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து லோயர்கேம்ப்குமுளி மலைப்பாதையில் ஏராளமான குரங்குகள் காத்திருக்கும். ஏனெனில் அவர்கள் மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி குரங்குகளுக்கு பிஸ்கெட், பழங்கள், ரொட்டி, பன், சாப்பாடு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்குவர். இந்தநிலையில் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக, 2 மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அறியாத குரங்குகள் மலைப்பாதையில் தினமும் வந்து செல்கின்றன.

ஆனால் வாகன போக்குவரத்து இல்லாததால், குரங்குகள் ஏமாற்றத்துடன் பசியுடன் காத்திருக்கின்றன. இதனை பார்த்த ஒருவர், உணவு பொருட்களை கொண்டு வந்து மலைப்பாதையில் நின்றிருந்த குரங்குகளுக்கு கொடுத்து பசியாற்றினார். சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து மலைப்பாதைக்கு வருகிற குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை உணவு கிடைக்காமல் அல்லல்படுகின்றன.

இதுமட்டுமின்றி குட்டிகளுடன் சுற்றித்திரியும் குரங்குகள், மலைப்பாதையை கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே மலைப்பாதையில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் அல்லது அவைகளுக்கு தேவையான உணவு பொருட்களை வினியோகம் செய்ய மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Translate »
error: Content is protected !!