சென்னை,
கொரோனா தடுப்பு பணி குறித்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி வாழ்த்து பெற்றார்.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவைகளின் கூட்டமைப்பு, மற்றும் தேசிய தொழில்சார் சுகாதார அறிவியல் நிறுவனமும் இணைந்து, உலகளாவிய மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றில் பணிகள் மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல் பரிசு பெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கான விருதை அம்மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.