கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கு உலகளாவிய டென்டர் விரைவில்..! – அமைச்சர் மா.சு தகவல்

கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கு உலகளாவிய டென்டர் விரைவில்: அமைச்சர் மா.சு தகவல்

கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும் எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது, ‘‘60 தன்னார்வலர்களைக் கொண்டு இருசக்கர வாகனங்கள் மூலம் உணவை எடுத்துச் சென்று 2,480 வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கோவையில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு 550 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 650 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!