கொரோனா நிவாரண உதவி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண தொகையாக 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிலையில் இன்று முதல் அதனை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை நிவாரண உதவித் தொகை 2000 ஆயிரம் ரூபாய் இன்று முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கிட டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழங்கப்படும் என்றும் அன்று நிவாரண உதவி பெற டோக்கன் பெற்றவர்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.