கொள்ளை வழக்கில் 65 பவுன் நகைகளை மீட்ட அம்பத்துார் போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை அம்பத்துாரில் கொள்ளை வழக்கில் 65 பவுன் நகைகளை மீட்ட அம்பத்துார் காவல் ஆளிநர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு வழங்கி பாராட்டினார்.

சென்னை, கோவூர், தண்டலம், எவரெஸ்ட் கார்டனைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39) என்பவது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடித்துச் சென்றனர். அது தொடர்பாக குன்றத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அம்பத்துார் துணைக்கமிஷனர் தீபா சத்யன் மேற்பார்வையில் எஸ்.ஆர்.எம்.சி உதவிக்கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ ஹரி, காண்டீபன், மாங்காடு தலைமைக்காவலர் மணிகண்டன், நசரத்பேட்டை தலைமைக்காவலர் திருநாவுக்கரசு, மாங்காடு தலைமைக்காவலர் பிரபு காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனையடுத்து அந்த வழக்கு தொடர்பாக பம்மலைச் சேர்ந்த பாலாஜி (38) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 65 சவரன் தங்க நகைகள், 2.4 கிலோ வெள்ளிப்பொருட்கள், 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பாலாஜி பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் மொத்தம் 9 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியுள்ளது தெரியவந்தது. வீடு புகுந்து திருடும் கொள்ளையனை கைது செய்த அம்பத்துார் துணைக்கமிஷனர் தீபா சத்யன் மேற்பார்வையிலான தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!