கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் “இந்தியா, ஜப்பானுடனான உடன்படிக்கையை ரத்து செய்யக்கூடாது” ; இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில்இந்தியா, ஜப்பானுடனான உடன்படிக்கையை ரத்து செய்யக்கூடாது” ; இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு துறைமுக விரிவாக்கத்திட்டத்தில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் முத்தரப்பு உடன்படிக்கையை மீறி துறைமுகப் பணிகளை உள்நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தது இலங்கை. இந்தியா மற்றும் ஜப்பானுடனான முத்தரப்பு உடன்படிக்கையை தன்னிச்சையாக ரத்து செய்த இலங்கை அரசு அண்மையில் அதன் கிழக்கு சரக்கு முனையத்தை முழுவதுமாக தன் பொறுப்பில் வைத்துக் கொள்ள அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.

துறைமுகத்தின் ஒரு பகுதியை மட்டுமே இந்தியாவுடன் இணைந்து விரிவாக்கப்பணிகளில் ஈடுபட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது . இந்தியா மற்றும் ஜப்பானின் முதலீடுகளால் இலங்கை நன்மையே அடையும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா சுட்டிக் காட்டியுள்ளார்.

Translate »
error: Content is protected !!