கோரோனோ தடுப்பூசி தடை மனு……மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தையடுத்து, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்தனர். நிபுணர் குழு அமைத்து அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தந்துள்ள சூழ்நிலையில் எந்த அடிப்படையில் தடுப்பூசிகளுக்கு தடை கேட்கிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். தடுப்பூசிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருந்துகொள்ளலாம் என கூறினர். இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறியதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!