கோவை கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்..? – மு க ஸ்டாலின் விளக்கம்

கோவை கொரோனா வார்க்குக்குள் சென்றது ஏன் என்பதை குறித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவு,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை கொரோனா கவச உடை (PPE Kit)அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.  தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்.

கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்.

இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம் இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Translate »
error: Content is protected !!