சாலையோர மரங்களில் ஆணிகள் அடித்து காயப்படுத்தி வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீதிமன்றம் அறிவுறுத்தியும் தொடர்ந்து சாலையோர மரங்களில் ஆணிகளை கொண்டு அடித்து காயப்படுத்தி வரும் நிறுவனங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை,  ஆண்டிபட்டி சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளனஇந்த மரங்களில் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களது விளம்பர பதாகைகளை ஆணி கொண்டு அடித்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இந்நிலையில் இன்று பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும்  தனியார் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று விளம்பர பதாகைகளை சாலையோரம் உள்ள புளிய மரங்களில் மரம் ஒன்றிற்கு 2 முதல் 4 வரை விளம்பர பதாகைகளை ஆணி கொண்டு அடித்து மரங்களில் பதித்துள்ளனர்.  

மேலும் மரங்களில் ஆணி கொண்டு அடித்து விளம்பர பதாகைகளை அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதித்துறையும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தேனியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு மரங்களில் காயப்படுத்தி ஆணி கொண்டு அடித்து மரங்களை காயப்படுத்தும் நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து

காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் பெரியகுளம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.  இதுகுறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் கேட்டபோது மரங்களில் ஆணி கொண்டு அடித்து விளம்பர பதாகைகளை மரைங்களில் விடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!