சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டிய போலீஸ் கமிஷனர்

சென்னை, புளியந்தோப்பு, எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் கொலையாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அது தொடர்பாக சிறப்பாக பணிபுரிந்த புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணா, எம்.கே.பி நகர் உதவி ஆணையாளர் அரிகுமார்,வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், எம்.கேபி நகர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் துரைராஜ், வியாசர்பாடி உதவி ஆய்வாளர் புருஷோத்தமன், வியாசர்பாடி உதவி ஆய்வாளர் பாஸ்கரன், எம்.கே.பி நகர் காவல் உதவி ஆய்வாளர்கள் கல்விஅரசன், கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் அரிஹரபுத்திரன், ஏம்.கே.பி நகர் தலைமைக்காவலர் ராஜன், கொடுங்கையூர் காவலர் சங்கர் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் திறமையாக செயல்பட்டு 17 நாளில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.


மேலும் பாண்டிபஜாரில் 250 பவுன் கொள்ளை வழக்கில் திறம்பட பணிபுரிந்த திநகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத், தேனாம்பேட்டை உதவி ஆணையாளர் தேவராஜ், பாண்டிபஜார் ஆய்வாளர் சந்திரசேகரன்மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படையினர் 1,200 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சென்னை பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முகுந்தன், முகமது இதயதுல்லா, தலைமைக்காவலர்கள் சுப்பிரமணியன், செல்வகுமார், சுதாகர், பவுன்ராஜ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 10ம் தேதியன்று மணலி SRF நிறுவனம் 37 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அடையாறு, சாஸ்திரி நகர் உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் வேளச்சேரி தலைமைக்காவலர் வெங்கடேசன், துரைப்பாக்கம் முதல் நிலைக்காவலர்கள் சங்கர், சண்முகம், சைதாப்பேட்டை முதல் நிலைக்காவலர் பூர்ணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கடந்த 9ம் தேதியன்று இரவு திருவான்மியூர், ஜெயந்தி திரையரங்கம் அருகில் MDMA போதை பவுடர், 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.15,500/- பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல சென்னை, திருவல்லிக்கேணியில் சினிமா நடிகர் அருண்பாலாஜி வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்த போது ரூ. 5 லட்சம் கொள்ளையடித்த இருவரை அண்ணா சதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையில், தலைமைக்காவலர் மோகன், முதல் நிலைக்காவலர்கள் சங்கர், பிரவீன்குமார், முருகேசன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கைது செய்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை நகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில அழைத்து வெகுமதி வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!