சிறுபான்மையிருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?..கே.எஸ் அழகிரி மழுப்பல்..!

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், – ‘2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை’ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியிடம், எளிமையான தலைவர் கர்ம வீரர் காமராஜர் போன்றவர்கள் தலைவர்களாக இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது பணக்காரர்களுக்ரான கட்சியாக மாறிக் கொண்டு இருக்கிறது;

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பெரும் வசதி படைத்தடைவர்களுக்கும் , கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது;என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே புகார் கூறியுள்ளார்களே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி,: இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை; கட்சிக்காக நீண்ட காலம்பணியாற்றியவர்களுக்கு அவர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளோம். எங்களின் 25 வேட்பாளர்களில் மூன்று வேட்பாளர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் பெரிய வசதி படைத்தவர்கள் அல்ல சிலர், நடுத்தரமான வசதியுடையவர்கள் மற்றும் சிலர், நடுத்தர த்துக்கும் கீழான நிலையில் உள்ளவர்கள்தான் என பதில் அளித்த அவர்

“நாங்கள் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள, 25 பேரில் ஒருவரையாவது கட்சிக்கு உழைக்காதவர்கள்- தகுதி இல்லாமல் தொகுதி வழங்கப்பட்ட வர்கள்?என யாரையும் சொல்ல முடியுமா? என்று பத்திரிகையாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார். அதற்கு, திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன், மற்றும் திரு. திருநாவுக்கரசர் ஆகியோரின் மகன்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளீர்கள். அவர்கள் இருவரும் கட்சிக்கு ஆற்றிய பணிகள் என்ன? செய்த தியாகங்கள் என்ன என்று சொல்லுங்களேன்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கே. எஸ் அழகிரியிடம் கேள்வி எழுப்பினார்.,

அதற்கு பதில் அளித்த கே. எஸ் அழகிரி, திருநாவுக்கரசர் மகன் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் மிக சிறப்பாக பணி காற்றில் கொண்டு இருக்கிறார்.. மேலும் அவர் விருப்ப மனு கொடுத்த தொகுதிக்கு வேறு ஒருவரும் விருப்ப மனு கொடுக்க வில்லை ;அதனால் தான் அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது என்று பதில் கூற, அதற்கு அந்த செய்தியாளர், ஒரு தொகுதிக்கு மற்ற எவரும் விருப்ப மனு கொடுக்க கூட முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டு, ஒருவரை மட்டுமே விருப்ப மனு கொடுக்க ஏற்பாடு செய்வது நியாயம்தானா? இது எப்படி ஜனநாயகம் ஆகும்? என்று கேள்வி எழுப்பினார்

மேலும் அந்த செய்தியாளர், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வாய்ப்பு மறுக்க பட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது? சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்., இதே கேள்வி பல முறை கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே. எஸ் அழகிரி இறுதிவரை அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.,

Translate »
error: Content is protected !!