சென்னை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741 பணியிடங்கள் மற்றும் 72 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த காவலர் தேர்வுக்கான முதற்கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் எழுத்து தேர்வு நடைபெற்ற. எத்திராஜ் மகளிர் கல்லூரி, லயோலா கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என 35 தேர்வு மையங்களில், 29,981 பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். இதற்காக, சென்னை நகர காவல் அதிகாரிகள் தலைமையில் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி மையங்களுக்கு சென்று, பாதுகாப்பு பணிகள் மற்றும் எழுத்து தேர்வு அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கினார்.