சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று… புதிய ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா..!

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள், கொரோனா தொற்றின் முதல் அலையில் இருந்து தப்பினாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அதன் 2வது அலையில் சிக்கி சீரழிந்து வருகின்றன.

சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்றுஎன, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை குற்றம்சாட்டி வந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, ‘கொரோனா வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஓர் உயிர்க்கொல்லி வைரஸ். அது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுஎன, சீனாவின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் லு மெங் யான் சமீபத்தில் பகீர் தகவல் வெளியிட்டார்.

இதே தகவல்களை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய நாட்டு பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன. சீனாவுக்கு எதிராக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவிடம் சிக்கிய ஆவணங்கள், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் மீண்டும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து, உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தவுள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை புதிய ஆவணங்கள் சிக்கியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவில் கொரோனா தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன், சீனாவின் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் பணியாற்றும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நேரம் மற்றும் அவர்களின் மருத்துவமனை வருகைகள் பற்றிய புதிய விவரங்களும் இடம்பெற்றிருப்பதால், வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கும் என்பதற்கான வலுவான ஆதாரமாக இந்த அறிக்கை கருதப்படுகிறது. ‘இது கொரோனா வைரசின் தோற்றம் குறித்த, உலக சுகாதார அமைப்பின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!