சீன நாட்டின் உஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்பதை நான் நம்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றி உலக நாடுகளை உலுக்கி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் உஹான் நகர ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என அமெரிக்கா குற்றம் சஷ்டி வருகிறது.
இவ்வாறு பல சர்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் உஹான் நகரில் உள்ள ஆய்வதில் இருந்து கொரோனா வெளியேறியதாக கருதவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிரிட்டன் பிரதமர் , விலங்குகளிடம் இருந்தே கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மற்ற நாடுகளின் கருத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும் என போரிஸ் ஜான்சன் கூறினார்