சீர்மரபு நலச் சங்கத்தினர் இரட்டை முறை சாதி சான்றிதழை முறையை தடை செய்து ஒற்றை முறை சாதி சான்றிதழ் வழங்க கோரி தேனி கம்பம் சாலையில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மரியல் பெண்கள் குழந்தைகள் உட்பட கைது.
தேனியில் இன்று 68 சமுதாய உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபினர் நலசங்கம் சார்பில் DNC (அட்டையில் அறிவிப்பு இல்லாத சமுதாயம்) என்ற பட்டியலில் இருந்து DNT (குற்றப் பழங்குடியினர்) பட்டியலில் சேர்க்க வழியுறுத்தியும், இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்திவிட்டு ஒற்றைச் சான்றிதல் முறையை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி
பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி கம்பம் சாலையில் சீர்மரபினர் நல சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் ஒற்றை சான்றிதழ் முறையை நடைமுறைப்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் தேனி கம்பம் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட கை முறிந்தது இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து உள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.