சென்னையில் கஞ்சா விற்ற 6 பேர் கைது: 9 கிலோ பறிமுதல்

சென்னை, புளியந்தோப்பு உள்பட 3 இடங்களில் கஞ்சா கடத்திய 6 பேரை கைது செய்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், வெங்கடேஷபுரம், நியூகாலனி அருகே நேற்று ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த கொளத்துாரைச் சேர்ந்த பாலாஜி (40), செங்குன்றம் பிரசாந்த் (வயது 24), கொறுக்குப்பேட்டை பத்மா (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரத்து 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல திருவல்லிக்கேணி போலீசார் பல்லவன் சாலை, எஸ்.எம்.நகர் கல்லறை அருகே ரோந்து சென்ற போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (22) மற்றும் 17 வயது சிறுவர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ 400 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் பணம் ரூ. 900- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கண்ணகிநகர் போலீசார் அங்குள்ள மசூதி பின்புறம் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற பிரேம் ஆனந்த் (வயது 32), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பணம் ரூ. 4,500 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!