சென்னையில் காவல்துறை கஞ்சாவேட்டை: 553 வழக்குகளில் 1,273 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை தொடர்பாக 9 மாதங்களில் 553 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,287 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை நகரம் கஞ்சா நகரமாக மாறி வருவது காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து கஞ்சா விற்பவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தினகரன், அருண் மற்றும் இணைக்கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், பாபு, மகேஷ்வரி மேற்பார்வையில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் கஞ்சாவை ஒழிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வரும் தகவலின் பேரில் தனிக்குழுவினர் கஞ்சா ரெய்டு நடத்தி அவற்றை பறிமுதல் செய்கின்றனர்.

நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் நெதர்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக சட்டக்கல்லுாரி மாணவர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவை அசாம் மாநிலத்தில் இருந்து லாரி பேட்டரிகளில் பதுக்கி கூரியரில் அனுப்பப்படுவது போலீசாரின் புலனாய்வில் தெரியவந்தது. அதன்பேரில் அவர்களிடம் இருந்து சுமார் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவை கல்லுாரிகளில் படிக்கும் பணக்கார வீட்டு இளைஞர்களுக்கு சப்ளை செய்யும் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின. அதே போல சென்னை, பெரியமேடு, மதுரவாயல், முத்தாபுதுப்பேட்டை போன்ற பகுதிகளில் 10 கிலோ சிக்கியது. மேலும் நேற்று முன்தினம் வில்லிவாக்கம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்த சிட்கோ நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (35) என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல சென்னை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தினமும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக சென்னை நகரில் 322 வழக்குகள் பதிவாகி உள்ளன. 553 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு மொத்தம் 1,287 கிலோ கஞ்சா மற்றும் 1,484 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் பலர் போதை பழக்கத்திற்கு ஆட்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’’. என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!