சென்னையில் நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு.. 4,772 வாகனங்கள் பறிமுதல்..!

சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

திரு.சங்கர் ஜிவால், .கா.., அவர்கள் உத்தரவின்பேரில், 18.05.2021 முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை

வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து, செக்டார்களாக  வகைப்டுத்தி 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து, ஒரு காவல் நிலைய சரகத்தில் இருந்து மற்றொரு காவல் நிலைய  எல்லைக்கு பொதுமக்கள் செல்ல பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை நகர போக்குவரத்து போலீசார் ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில்  சென்றது தொடர்பாக 1,477 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 1,014 இருசக்கர வாகனங்கள், 65  ஆட்டோக்கள், 19 இலகுரக வாகனங்கள் மற்றும் 22 இதர வாகனங்கள் என மொத்தம் 1,120 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், 2,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 3,372

இருசக்கர வாகனங்கள், 238 ஆட்டோக்கள், 42 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 3,652 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,531 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 356 வழக்குகளும், அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 111 கடைகள் மூடப்பட்டுரூ. 8 லட்சத்து 96 ஆயிரத்து 300- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!