சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த 5 நாட்கள் தடை போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை நகரில் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்த 5 நாட்கள் தடை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை நகரில் தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் 41ன் படி சென்னை நகரில் நேற்று (26.9.2020) நள்ளிரவு 12 மணி முதல் அக்டோபர் 1ம் (1.10.2020)தேதி இரவு 12 மணி வரை பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனிதச்சங்கிலி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் உள்ளிட்டவைகளும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது’’ இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சென்னை நகரில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது அமல்படுத்தப்படுவதாகவும் இது வழக்கமான நடைமுறைதான் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!