சென்னை நகரில் வாகனங்களில் போக்குவரத்து வாகனச்சட்ட விதிமுறைப்படி நம்பர் பிளேட் அமைக்கப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் கீழே தரப்பட்டுள்ளது:–
2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின்னர் புதியதாக வாகனப்பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் high security registration plate HSRP எனப்படும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் வாகனத்தில் பொருத்தப்படவேண்டும். இதனை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.