சென்னையில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

சென்னை

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 3-வது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் நேற்று 745 பேருக்குகோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 56 பேருக்குகோவேக்சின்தடுப்பு மருந்தும் என மொத்தம் 801 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,746 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!