சென்னை ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை பாராட்டிய போலீஸ் கமிஷனர்

சென்னை ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி. சிட்லபாக்கம், மாங்காடு, புழல், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை புனித தோமையர் மலை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயராம், தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், விக்னேஷ்வரன், முதல் நிலைக்காவலர் அன்பரசன், ராஜ்குமார் ஆகியோர் கடந்த 18ம் தேதி சிட்லப்பாக்கம் ஜமீன் ராயப்பேட்டை, ஏரிக்கரை தெரு அருகே  கண்காணிப்பு பணியிலிருந்தனர். அப்போது, கஞ்சாவுடன் நின்றிருந்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தாமு (எ) தாமோதரன் (38), பாக்கம் என்பவரை கைது செய்தனர். மேலும் சிட்லப்பாக்கம் அம்பேத்கார் நகர், ரத்தினம் தெருவில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கிஷோர்குமார் (34) என்பவரும் பிடிபட்டார்.

அவர்களிடமிருந்து 41 கிலோ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிட்லப்பாக்கம் போலீசார்
விசாரணைக்குப்பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, முகலிவாக்கம் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண் கடந்த 8ம் தேதியன்று மாலை சுமார் 6.40 மணிக்கு தான் வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றார். முகலிவாக்கம், ஆசிரமம் அவென்யூ அருகில் வந்த போது
பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் மேற்படி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் போலீசில் புகார் அளித்ததன் பேரில் மாங்காடு எஸ்ஐக்கள் ராஜா, விஜயகுமார் ஆகியோர் அங்கு பதிவான சிசிடிவி கேமரா
மூலம் மதுராந்தகத்தை சேர்ந்த ஆதாம் அலி (25) என்ற நபரை கைது செய்தனர்.

 

சென்னை, திருவல்லிக்கேணி, கற்பக கண்ணியம்மன் கோயில் 3வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (47). கடந்த 17ம் தேதியன்று இரவு 8.30 மணியளவில் பெரிய தெருவிலுள்ள மாவு கடைக்கு சென்று பார்த்தசாரதி சாமி தெரு வழியாக
திரும்பி நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த நபர் லட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இது தொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலைய தலைமைக் காவலர்கள் பார்த்தசாரதி, சதீஷ்குமார் ஆகியோர் சிசிடிவி கேமரா மூலம் லட்சுமியிடம் செயினைப் பறித்த 16 வயது இளஞ்சிறுவர் மற்றும் அவரது கூட்டாளி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சக்திவேல் (எ) சக்தி ஆகிய இருவரை
கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தங்கச்செயினை வாங்கிய விஜய் (எ) சொரி விஜய் (24) ஆகிய இருவரையும் சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் கைது செய்தனர்.

அதே போல கடந்த 15ம் தேதியன்று மணலியைச் சேர்ந்த 26 வயது பெண் அதே பகுதியைச் சேர்ந்த தனது ஆண்நண்பருடன் புழல் பகுதியில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தான் ஒரு போலீஸ் என்றும் ஏன் இங்கே நின்று பேசிக்கொண்டுள்ளீர்கள் என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணை மட்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று பிறகு இருட்டான பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்
அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பர்ஸிலிருந்த பணம் ரூபாய் 15,000- ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மாதவரம் மில்க் காலனி எஸ்ஐ சதீஷ்குமார் மாதவரம், தீயணைப்பு துறை அலுவலகம் எதிரில் கண்காணிப்புப் பணியில் பணியிலிருந்த போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி (37) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர்தான் புழல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

 

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நேற்று கடந்த 18ம் தேதி மதியம் தனது தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சைக்கிளில் வெளியே சென்று துரைப்பாக்கம், காரப்பாக்கம் பேருந்து நிலையத்தில்
தனியாக அமர்ந்திருந்தார். அந்த வழியாக ரோந்த வந்த கண்ணகி நகர் எஸ்ஐ வேலு, தனியாக அமர்ந்திருந்த சிறுமியை விசாரித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார். விவரம் அறிந்த அவர் பின்னர் மைலாப்பூர் பகுதியில் உள்ள அவரது
பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை பத்திரமாக ஒப்படைத்தார்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
******

Translate »
error: Content is protected !!