சென்னை சாத்தங்காட்டில் ரூ. 10 லட்சம் குட்கா பறிமுதல்

சென்னை,

சென்னை, சாத்தாங்காடு பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 10,150 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, சாத்தாங்காடு பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக வணிகவரித்துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் வணிகவரித்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவினருடன் இணைந்து அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் சாத்தாங்காடு தனியார் நிறுவனம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். அப்போது அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த சென்னை பழை வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்நத கோவிந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர். அவர் சரக்கு வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 10,150 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கடத்தச் சொல்லி கோவிந்தனை அனுப்பி வைத்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கோவிந்தன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!