சென்னை நகரில் கொரோனா விழிப்புணர்வு வாகனம்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார்

சென்னை நகரில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சென்னை நகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொரோனா தொற்று பாதிக்காமல் பாதுகாப்புடன் பணியில் ஈடுபடவும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்னை நகரில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, உலக அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சங்கம் சார்பில் உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை நகர போலீஸ் கமிஷனர் நேற்று துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் சென்னை மற்றும் இதர பகுதிகளில் சென்று கொரோனா பரவாமல் தடுப்பது குறித்த அரசு வழங்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளும். இந்த வாகனத்தை அனைத்து வசதிகளுடன் இந்த வாகனத்தை உலக அரசியலமைப்பு சங்கத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் விழிப்புணர்வு பணிகளுக்காக சென்னை நகர காவல்துறைக்கு அர்ப்பணித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற வக்கீல் ரவி, கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், தினகரன், கண்ணன் மற்றும் போக்குவரத்து இணைக்கமிஷனர்கள் லட்சுமி, பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!