சென்னை பெரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் உள்படட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு சக்கரவாகனங்கள், 1 ஆட்டோ, 1 கார் மற்றும் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, சித்தாலப்பாக்கம், வெற்றில்வேல் நகரில் வசித்து வருபவர் சண்முகப்பிரியன் (33). கடந்த 23.5.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு அவரது ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் (24.5.2021) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சண்முகபிரியன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் உள்ள  கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை செய்து தேடுதலில் ஈடுபட்டார். அதனையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளிகள் எழில்நகரைச் சேர்ந்த சுபாஷ் (25), சந்தோஷ் (27) ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து பெரும்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றை திருடியதும், பின்னர் திருடிய வாகனங்களை பூஞ்சோலை என்பவரிடம் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதன்பேரில் காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு பூஞ்சோலை என்பவர் காரில் வரும்போது பிடித்து விசாரணை செய்தனர். காரில் பெருமளவு கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், சுபாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் சேர்ந்து 5 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 கார் ஆகியவற்றை திருடி, பூஞ்சோலை என்பவரிடம் விற்று பணம் மற்றும் கஞ்சா பெற்றுள்ளதும்பூஞ்சோலை திருட்டு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்த நிலையில், சட்ட விரோதமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சுபாஷ் என்பவர் மீது 2 வழிப்பறி வழக்குகளும், வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் மீது சென்னையில் உள்ள பல காவல் நிலையங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதும், சந்தோஷூக்கு நிரந்தர முகவரியில்லாததால், குற்ற வழக்கில் கைதாகி சிறைக்கு செல்லும்போது, அங்குள்ள குற்றவாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பூஞ்சோலை மீது ஏற்கனவே ஆவடி காவல் நிலையத்தில் 3 கஞ்சா வழக்குகள் மற்றும் 2018ம் ஆண்டு ஒரு ஆட் கடத்தல் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளிடமிருந்து சண்முகபிரியனின் 1 இருசக்கர வாகனம் உட்பட 5 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 1 கார் மற்றும் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Translate »
error: Content is protected !!