சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை

சென்னை,

தமிழகத்தில் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பாலவாக்கத்தில் இன்று வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் காலையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதி தர ஆலோசிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!