# தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
# சென்னையில் மேலும் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
# வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,626 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
# ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
# மதுரை மாநகரில் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி தர தடை கோரும் வழக்கில் போக்குவரத்து ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
# 58 ஆண்டுகளாக மின்சார உற்பத்தி செய்துவந்த என்.எல்.சி.யின் முதல் அனல்மின் நிலைய உற்பத்தி நிறுத்தம்
# ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுள்ளன.
# ரூ.488 கோடி நிதி இருக்கும்போது பெரிய கோயில்களின் உபரி நிதியை பெற வேண்டிய அவசியம் ஏன்? இந்து அறநிலையத்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
# இந்தியாவில் முதல் முறையாக அதிநவீன சிடி ஸ்கேனர் கருவி – அப்பலோ மருத்துவமனையில் அறிமுகம்
# பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்
# பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
# 18 மாதம் குழந்தை ஒன்று கடலைப் பருப்பைத் தின்னும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகிலுள்ள கிராமத்தில் வசித்துவருபவர் விஜய். இவருக்கு 18 மாதக் கைக்குழந்தை(பெண்) உள்ளது.
# சமீபத்தில் உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றிச் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் எம்.ஜி.எம் மருத்துவமனையில் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.அதில், மறைந்த எஸ்.பி,பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகவும் பிடித்ததாக அவர் கூறியதாகத் தெரிவித்துள்ளனர்.
# சினிமாவில் குதிக்கின்றார் தோனி: சாக்சி தோனி தகவல்
# பிரபல சின்னத்திரை நடிகை நவீனா போல் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
# திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறித்தும் உயர் நீதிமன்றம் கவலை 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது- காவல்துறை பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
# அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிஅடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். வேலை காரணமாக முதல்வர் நடத்திய கூட்டத்துக்கு ஓபிஎஸ் வரவில்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி இல்லை. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
# தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு இளைஞர் செல்வன் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல் தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு இளைஞர் செல்வன் குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்று கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல் தெரிவித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.சொத்துத் தகராறு காரணமாக காரில் கடத்திக் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்டார்.
# மதுரை மாநகர் பகுதிகளான கே.புதூர், ஆத்திக்குளம், அய்யர் பங்களா, தெப்பக்குளம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கன மழை.
# பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கிய செப்.7ம் தேதி முதல், இதுவரை 28 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.- பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
# உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் (94) சென்னையில் காலமானார்.
# ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான ராம.கோபாலன் மறைவு பேரிழப்பாகும்-சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், கருணாநிதியும், ராம. கோபாலனும் நல்ல நண்பர்களே!- மு.க.ஸ்டாலின்