சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது என மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

உடன் எஸ்.ஆர் பார்த்திபன் எம்பி ராஜேந்திரன் எம்.எல்.ஏ மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உடன் இருந்தனர்.

Translate »
error: Content is protected !!