ஜப்பானிய சரக்கு கப்பலுடன் வெளிநாட்டு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 மாலுமிகள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பான் நாட்டின் மேற்கே எஹிம் மாகாண கடற்பகுதி உள்ளது. அங்கு 11,454 டன் எடை கொண்ட நாட்டு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ரசாயன லோடு ஏற்றி வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்றுடன், சரக்கு கப்பல் மோதியது.
இந்த விபத்தில் சரக்கு கப்பல் சேதமடைந்து நீரில் மூழ்க தொடங்கியது. அந்த கப்பலில் 12 மாலுமிகள் இருந்தனர். சரக்கு கப்பல் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் கடலில் மூழ்க தொடங்கியது. இந்த விபத்தில் ஜப்பானிய மாலுமிகளில் 3 பேர் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்களை கடற்படையினர் தேடி வருகின்றனர். மோதிய வெளிநாட்டு கப்பலில் தென் கொரியா மற்றும் மியான்மரைச் சேர்ந்த 13 பேர் இருந்ததாக ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது